மூடு

கல்வராயன் மலை

வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

இது கிழக்கு காடுகளின் ஒரு பகுதியாகும், கல்வராயன் மலை தாலுக்காவின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. இந்த பகுதி 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்டது. கல்வராயன் மலை மற்றும் அதன் ஜாகிர்தர்கள் களின் வரலாறு விஜய நகர் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்தது. கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கினார். ஆனால் பல வரிகளை சுமத்தினார்.

மலையடி பழங்குடியினர்களில் ‘கரளர்’ சமுதாயத்தைச் சார்ந்த வீரர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து கல்வராயன் மலைகளில் குடியேறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் ‘வேடர்’ (வேட்டைக்காரர்) என அழைக்கப்படும் பழங்குடி மக்களை விரட்டி அவர்கள் மனைவிகளை மணந்தார்கள். தற்போது கரளர் மற்றும் வேடர் சமூகங்களை ‘மலையாளி’ என்று அழைக்கப்படுகின்றன, அவர்கள் தங்களை ‘கவுண்டர்கள்’ என்று கூறுகிறார்கள். கல்வராயன் மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. நீர்வீழ்ச்சிகள், நீரோடை, ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போக இடங்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. தமிழ்நாட்டின் ’ஏழைகளின் மலை பிரதேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கோடைக்கால விழாவை நடத்துகிறது.

அடைவது எப்படி:

வான் வழியாக

மிக அருகில் உள்ள வானூர்தி நிலையம் சென்னை. சென்னையில் இருந்து 230 கி.மீ தொலைவில் உள்ளது கள்ளக்குறிச்சி நகரம். அங்கிருந்து கல்வராயன் மலை செல்ல பேருந்து வசதி உள்ளது.

தொடர்வண்டி வழியாக

சென்னையிலிருந்து சேலம் செல்லும் தொடர்வண்டியில் சின்னசேலத்தில் இறங்கவும். அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாக கல்வராயன் மலை செல்ல பேருந்து வசதி உள்ளது.

சாலை வழியாக

சென்னையிலிருந்து சேலம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து கல்வராயன் மலை செல்ல பேருந்து வசதி உள்ளது.