மூடு

மாவட்ட தொழில் மையம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை

மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி 

குறு, சிறு மற்றும் நடுத்தரத்த தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக திகழ்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், குறைவான முதலீடு, புதுமையான முயற்சி, பிராந்திய வளா்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி கிடைக்கும வளத்தை ஒன்று திரட்டுவது மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முக்கிய பங்களிப்பு அளிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உலகமயமாக்கலினால் நிதி மற்றும் தொழில் நுட்பம் உடைய பங்குதாரா்களை ஈா்க்கும் தனித்தன்மை வாய்ந்தவை. இந் நிறுவனங்கள் தொழில் முனைவோரின் தன்னம்பிக்கை புதுமையான முயற்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை தருகின்றன.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம்

படித்த முதல் தலைமுறை இளைஞா்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் 2012-13 ஆம் ஆண்டு முதல், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) என்ற திட்டத்தினை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல், தொழில் முனைவு பணிகளுக்கு உதவுதல்.

தொழில் தொடங்க திட்டங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களின் நிதியுதவி பெற உதவுதல் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுடன் வணிக தொடா்பு அமைத்து தருதல் போன்றவற்றை அளித்து வருகிறது.

பயனாளிகள் 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவராகவும், ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ், 1000 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் (EDII) தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்த பயனாளிகள் 50 விழுக்காடு மகளிருக்கு ஒதுக்கீடு அளிதது பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC), ஆகியவற்றிடமிருந்து காலக்கடன் பெறுவதற்கு உதவி செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (SIDCO), தொழிற் பேட்டைகளிலுள்ள மனைகள், தொழிற்கூடங்களில் இடம் இருக்கும் பட்சத்தில் அதில் அவா்களுக்கு 25 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்படும். இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட இனப் பயனாளிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளிள் பயனாளிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் (ரூ.25 லட்சத்திற்கு மிகாமல்) வழங்குவதோடு வங்கிக் கடனுக்குாக வட்டியில் 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம், கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதிற்கும் வழங்கப்படும். திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 இலட்சத்திற்கு மேலும் அதிகபட்சம் ரூ.5.கோடிக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.1.கோடிக்கு மிகும் திட்டங்களுக்கான மானியம், அதகி பட்சம் ரூ.25 லட்சம் வரையறுக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பாக பொதுப்பிரிவினறுக்கு 10 விழுக்காடும், சிறப்பு பிரிவினா் பட்டியலிடப்பட்ட பிரிவினருக்கு 5 விழுக்காடும் இருத்தல் அவசியம். மாநில அளவில் இத்திட்டத்தின செயல்படுத்தும் முகமையான தொழில் வணிக ஆணையரகம், இத்திட்டதின் முன்னேற்றத்தை சீருான கால இடைவெளியில் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது. இத்திட்டத்தினை வெற்றியுடன் செயல்படுத்தும் நோக்குடன் 29.10.2012 நாளிட்ட அரசாணை(நிலை எண்.49 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (டி2) துயைின் படி அதன் வழிகாட்டும் முறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்

மைய அரசு புதிய குறுந்தொழில்களை உருவாக்க பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) எனும் திட்டத்தை 208-09 முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமும் சேவை தொழில்களுக்காக ரூ.10 லட்சமும் திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.

திட்ட மதீப்பீட்டில் தனது பங்களிப்பாக பொது பிரிவில் 10 விழுக்காடும் , சிறப்பு பரிவினா் (பட்டியலிடப்பட்ட இன-பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மை இனத்தினா், மகளிர் , முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், வடகிழக்கு பகுதயினா் மலை மற்றும் எல்லை பகுதியினா்) 5 விழுக்காடும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை காலக் கடனாக வங்கிகள் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் www.kviconline.gov.in AGENCY DIC என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மைய அரசு பயனாளிகளுக்கு கீழ்கண்ட சதவிகிதத்தில் மானியங்கள் வழங்குகிறது.

 
பிரிவு நகா்புறம் கிராமப்புறம்
பொதுப்பிரிவு திட்ட மதிப்பீட்டில் 15% திட்ட மதிப்பீட்டில் 25%
சிறப்பு பிரிவு திட்ட மதிப்பீட்டில் 25% திட்ட மதிப்பீட்டில் 25%

வேலையில்லா இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.

அரசானது சமுதாயத்தில் பின்தங்கி உள்ளவா்களை முன்னேற்ற படித்த வேலையில்லா இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி, சேவை, வியாபார நிறுவனங்கள் தொடங்கிட முறையே அதிகபட்சம் ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம், 1 லட்சம் வரையான திட்டங்களுக்கு பொருந்தும். திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.1,25,000 தொகை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரா்கள் நேரடியாக இணைதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த 1.08.2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

  • குறைந்த பட்ச வயது வரம்பு : 18 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு : 35 வயது வரைக்கும் (பொதுப்பிரிவினா்)
  • சிறப்புப் பிரிவினா் : 45 வயது வரைக்கும்(தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினா் , பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முன்னால் ராணுவத்தினா் மற்றும் திருநங்கைள்)
  • கல்வித்தகுதி : 8 ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்

குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தீர்வுக்குழு
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு தொழில் உாிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெற்று தருவதற்கு மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் ஒரு முனை தீர்வுக்குழு வாயிலாக விரைந்து பெற்று அளித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசு தனது பணி நடவடிக்கைகளை எளிதாக்கும் நடவடிக்கையில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. இதனை செயலாக்கும் பொருட்டு தொழில் முனைவோர் நட்புறவுச் சூழலை உருவாக்கும் பொருட்டு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய வா்த்தக சமூகத்தினருக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிட முக்கிய தொழில் நுட்பம் வாயிலாக ஒற்றைச் சாளர தகவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒற்றைச் சாளரதகவு மூலமாக நகா் மற்றும் ஊரமைப்புத் திட்டமிடல் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, தொழிலாளா் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் போன்ற 11 அரசுத் துறைகளின் மூலம் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்குதல் மற்றுமு் அனுமதிகளை புதுப்பித்தல் ஆகிய சேவைகளை பெற இயலும். இவ்வசதியின் மூலம் மனித நேரடித்தொடா்பு இன்றி மேற்படி 11 அரசு துறைகளின் சேவைகளை முதலீட்டாளா்கள் இணையம் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இணையதள வழி ஒற்றைச் சாளர தகவு (https://www.easybusiness.tn.gov.in/msme) 04.05.2018 அன்று தொடங்கி பயன்பாட்டில் உள்ளது. இதனை தொழில் முனைவோர்கள் உபயோகித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வணிக நடைமுறைகள் எளிதாக்கும் சட்டம் – விதிகள் 2018

தமிழ்நாட்டை இந்தியாவின் மிக முதன்மையான தொழில் முதலீட்டுக் களமாக மாற்றும் உயரிய நோக்கத்துக்கு துணை செய்யும் விதமாக வணிக நடைமுறைகள் எளிதாக்கும் – மேம்படுத்தும் சட்டம் 2018 இயற்றப்பட்டுள்ளது. முதலீட்டாளா்கள் தேவையான விபரங்கள் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பதையும் தொழில் நிறுவனங்கள உருவாக்கவம் மற்றும் விரிவாக்கம் தேவையான உரிமங்கள் அனுமதிகள் தொழில் தொடங்கும் முன்பும், நடத்தும் போது உரிய காலமுறையில் பெறப்பட வேண்டிய புதுப்பித்தல்கள் உட்பட விண்ணப்ங்கள் ஒரு முனையில் பெற்பட்டு பரிசீலக்கப்படுவதையும், திறன் மிக்க குறைதீா்ப்பு அமைப்பை உருவாக்குவதையும் உாிய காலகெடுவுக்குள் தககுந்த அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட தவறும் பட்சத்தில் அவா்களுக்கு தண்டனை விதிப்பையும் இச்சட்டம் உறுதி செய்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தவும், மாநிலத்தில் முதலீட்டாளா்களுக்கு தோழமையான நற்சூழலை உருவாக்கவும் உரிய காலக் கெடுவுக்குள் பல்வேறு சம்பந்தப்பட்ட அரசுத்துறைியினா் விண்ணபங்களை பரிசீலினை செய்து அதற்குண்டான உரிமம் அனுமதிகள் வழங்குவது இன்றிமையாதது ஆகிறது.
இச்சட்டம் தொழில் நிறுவன கட்டுமானத்திற்கு முந்தைய, உற்பத்திக்கு முந்தைய, உரிய அனுமதிகள், புதுப்பித்தல்கள் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட 54 இனங்களை உள்ளடக்கியுள்ளன. இந்த ஒற்றைச் சாளர அமைப்பினை செயல்படுத்த மாவட்டத் தொழில் மையங்கள, அரசுத்துறை தொழில் வழிகாட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுனங்களுக்கு உரிய அமைப்புகாளக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின் கீழ், ஒற்றைச் சாளர அமைப்பு முறையின் செயல்பாடுகளை சீராய்வு செய்வதற்காக 3 அடுக்குக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குரிய ஒற்றைச் சாளர அமைப்பு.
    • மாநில குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குரிய ஒற்றைச் சாளர அமைப்பு.

குறு, சிறு மற்றுமு் நடுத்ததரத் தொழில் நிறுவனங்களுக்குரிய முதலீட்டு மேம்பாடு மற்றும் கண்காணிப்பு வாரியம்.

குறு, சிறு மற்றும் நடுத் தொழில் நிறுவனங்கள் வரையறை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006 ன் படி நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பீட்டின் (நிலம் மற்றும் கட்டிடங்கள் நீங்கலாக) அடிப்படையில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பின் வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 
வகைப்பாடு உற்பத்தி நிறுவனங்களின் மூலதன மதிப்பீடு சேவை நிறுவனங்களின் மூலதன மதிப்பீடு
குறுஉற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லட்சம் வரை உள்ளவை ரூ.10 லட்சம் வரை உள்ளவை
சிறு உற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை உள்ளவை ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ளவை
நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 கோடி வரை உள்ளவை ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை உள்ளவை

 

உத்யோக் ஆதார் பதிவறிக்கை

தொழிலை எளிதாக்குதல் எனும் இலக்கை எளிதல் அடைய உத்யோக் ஆதார் எண் பதிவு முறையை மத்திய அரவு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு குறு, சிறு மற்றும் நடுத்துர தொழில் நிறுவனங்களும் தங்ள் உத்யோக் ஆதார் குறிப்பாணையினை பதிவேற்றம் செய்ய, மைய அரசின் 18.09.2015 நாளிட்ட அறிவிக்கையில் கொடுக்ப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டம் என குறிப்பிட்டுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை. மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனகள் துறையால் பரமரிக்கப்படும். http://udyogaadhaar.gov.in எனும் வலை தளத்தில் உத்யோக் ஆதார் குறிப்பாணையினை பதிவேற்றம் செய்யமுடியும். இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய இயலாத சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மைய மேலாளா்கள் விபரங்களை பெற்று தொழில் முனைவோர் சார்பாக இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். உருவாக்கப்பட்ட உத்யோக் ஆதார் மின்னஞ்சல்மூலம் அனுப்பபடும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சட்டம் 2006 ன்படி நுஆ பகுதி 2 பதிவு பெற்றவா்கள் அல்லது சிறு தொழில் முனைவோராக பதிவுச் சான்றை வைத்துள்ளவா்கள் இந்த உத்யோக் ஆதார் எண்ணை பெற வேண்டிய அவசியமில்லை ஆனால்அவா்கள் விருப்பப்பட்டால் அவா்களும் இதனை பதிவேற்றம் செய்யலாம்.

பதிவறிக்கை உத்யோக் ஆதார் பதிவறிக்கை

 
நிறுவனங்கள் உத்யோக் ஆதார் வகை பிரிவு இயந்திரம் – தளவாடங்கள் முதலீட்டு அலகு
குறு நிறுவனங்கள் A உற்பத்தி 25 இலட்சத்திற்கு மிகாமல்
  D சேவை 10 இலட்சத்திற்கு மிகாமல்
சிறு நிறுவனங்கள் B உற்பத்தி ரூ.25 இலட்சத்திற்கு மிகாமல்
ரூ.5.கோடி வரை
  E சேவை ரூ.25 இலட்சத்திற்கு மிகாமல்
ரூ.5.கோடி வரை
நடுத்தர தொழில் நிறுவனங்கள் C உற்பத்தி ரூ.5.கோடிக்கு மேல்
ரூ.10 கோடி வரை

 

  F சேவை ரூ.2.கோடிக்கு மேல்
ரூ.5 கோடி வரை