அரசு துறை ஆணை எண். 150 நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 31.05.1994-ல் ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து பேரூராட்சிகளை, தனித் துறையாக பிரித்து 1994-ம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய நகராட்சிகள் சட்டம் 25-ன்கீழ் கொண்டுவரப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்ட பேரூராட்சி அலுவலர், (District Town Panchayat Officer-DTPO) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பேரூராட்சிகள்) என்ற பெயரில் இருந்த பதவியினை 06.02.1995 முதல் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் என்று வகைப்படுத்தி, மண்டல அலுவலகம் என்று இயங்கி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 மண்டலங்களில் கடலூர் மண்டலமும் ஒன்று. இம் மண்டலம் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களது நேரடி கட்டுப்பாட்டிலும், உதவி இயக்குநர் கண்காணிப்பிலும் இயங்கி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 7 பேரூராட்சிகள் உள்ளன, பேரூராட்சிகள் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு தரம் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
வ. எண் | பேரூராட்சிகளின் விவரம் | எண்ணிக்கை |
---|---|---|
1. | சிறப்பு நிலை பேரூராட்சிகள் | 2 |
2. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | 4 |
3. | முதல்நிலை பேரூராட்சிகள் | 1 |
வ.எண் | நிலை | பேரூராட்சிகளின் பெயர் |
---|---|---|
1. | சிறப்புநிலை பேரூராட்சிகள் | சின்னசேலம் |
2. | சிறப்புநிலை பேரூராட்சிகள் | உளுந்தூர்பேட்டை |
3. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | வடக்கனந்தல் |
4. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | தியாகதுருகம் |
5. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | சங்கராபுரம் |
6. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | திருக்கோயிலூர் |
2. | முதல்நிலை பேரூராட்சிகள் | மணலூர்பேட்டை |
வ.எண் | பேரூராட்சிகளின் பெயர் | தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலர் | அலுவலக தொலைபேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
---|---|---|---|---|
1. | சின்னசேலம் | செயல் அலுவலர் | 04151 – 236229 | chinnasalemtp2006[at]gmail[dot]com |
2. | வடக்கனந்தல் | செயல் அலுவலர் | 04151 – 234243 | eotpv2[at]gmail[dot]com |
3. | தியாகதுருகம் | செயல் அலுவலர் | 04151 – 233244 | eotgmtp[at]gmail[dot]com |
4. | சங்கராபுரம் | செயல் அலுவலர் | 04151 – 235032 | eosankai[at]gmail[dot]com |
5. | திருக்கோயிலூர் | செயல் அலுவலர் | 04153 – 252384 | eotpv5[at]gmail[dot]com |
6. | உளுந்தூர்பேட்டை | செயல் அலுவலர் | 04149 – 222271 | eotpv06[at]gmail[dot]com |
7. | மணலூர்பேட்டை | செயல் அலுவலர் | 04153 – 232422 | eotpv12[at]gmail[dot]com |
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,
பழைய நாட்டாண்மைக் கழக கட்டடம்,
பீச்ரோடு,
கடலூர்- 607001.
தொலைபேசி எண் – 04142 – 294542
நிகரி – 04142 – 294542
மின் அஞ்சல் – adtp-tncud[at]nic[dot]in,
adcuddalore[at]gmail[dot]com