மூடு

அருள்மிகு வீரட்டேஸ்வரர் ஆலயம், திருக்கோவிலூர்

வகை மதம் சார்ந்த
மூலவர் : வீரட்டேசுவரர்

உற்சவர் : அந்தகாசுரவத மூர்த்தி

அம்மன் – தாயார் : பெரியநாயகி, சிவானந்தவல்லி

தல விருட்சம் : சரக்கொன்றை

தீர்த்தம் : தென்பெண்ணை

புராணப்பெயர் : அந்தகபுரம், திருக்கோவிலூர்

ஊர் : திருக்கோவிலூர்

மாவட்டம் : கள்ளக்குறிச்சி

இத்திருக்கோவில், சிவபெருமானால் வீரப்போர் நடத்தப்பட்ட 8 தலங்களில் (அஷ்ட வீரட்ட தலங்கள்) ஒன்றாகும். இது நடுநாட்டு சிலதலங்களில் 11ஆவது தலமாக தேவாரத்தில் பாடப்பெற்ற சிறப்புடையது. இத்தலத்து இறைவனை அப்பர், திருஞானசம்பந்தர், மற்றும் சுந்தரர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ள பாடல்கள் தேவாரத்தில் உள்ளன.

தலவரலாறு:

அட்ட வீரட்ட தலங்களில் 2-வது வீரட்டான திருத்தலம் இது. வாஸ்து சாந்தி எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பாள் திருபுர பைரவி உற்பத்தி தலம். சப்தமாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைவரர்கள் மற்றும் 64 பைரவிகள் உற்பத்தியான தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் இது 222வது தேவாரத் தலம் ஆகும்.

ஈசனின் மனைவியான பார்வதி, ஈசனின் இரு கண்களையும் (சூரியன், சந்திரன்) விளாயாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள் (அஞ்ஞானம்). அந்த அசுரனான அந்தகாசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க, அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தியாகி போர் தொடர்நது கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனி; தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறார். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக் கோடுகளாகி எட்டுத் திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்கச் செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதுவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களிலும், வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகாசூரனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேஸ்வரர் ஆவார்.

புகைப்பட தொகுப்பு

  • அருள்மிகு வீரட்டேஸ்வரர் ஆலயம்
  • அருள்மிகு வீரட்டேஸ்வரர்
  • கபிலர் குன்று, திருக்கோவிலூர்

அடைவது எப்படி:

வான் வழியாக

மிக அருகில் உள்ள வானூர்தி நிலையம் சென்னை. சென்னையில் இருந்து தொடர்வண்டி மற்றும் பேருந்து வசதி உள்ளது.

தொடர்வண்டி வழியாக

சென்னையில் இருந்து தொடா்வண்டி மூலம் விழுப்புரம் வரை செல்லவும். விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் தொடர்வண்டி மூலம் திருக்கோயிலூர் செல்லும் வசதி உள்ளது.

சாலை வழியாக

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது . சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.