இணையதள கொள்கைகள்
பயன்படுத்தும் வழிமுறைகள்
இந்த வலைதளத்தின் தகவல்களைனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தால் கையாளப்படுகிறது. இதில் உள்ள தகவல்கள் மிகச்சரியானதாகவும், தற்போதைய தகவல்களாகவும் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருந்தாலும் இவைகள் சட்டப்பூர்வமானதாகவோ, வழக்கு விபரங்களுக்கு பயன்படதக்கதாகவோ கருதப்படக்கூடாது.
இந்த வலைதள தகவல்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் எந்தவிதமான நேரடியான அல்லது மறைமுகமான இழப்புகள், பாதிப்புகள் மற்றும் செலவுகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் பொறுப்பேற்காது.
இந்த வலைதளத்திலிருந்து இதர பிற வலைதளத்திற்கு செல்ல உதவும் அனைத்து இணைப்பு முகவரிகளும் பொது மக்களின் வசதிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதர பிற வலைதள பக்கங்கள் எப்போதும் இருப்பில் இருக்குமென்று எங்களால் உறுதிப்படுத்த இயலாது.
இந்த வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்திய சட்டங்களின் ஆளுமைக்கு உட்பட்டது. இவற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் இந்திய நீதிமன்றங்களின் முழுமையான அதிகார வரம்புகளுக்கு உட்பட்டதாகும்.
காப்புரிமை கொள்கை
எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்து, எங்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று, இந்த வலைதளத்திலுள்ள தகவல், விவரங்களை கட்டணமின்றி மறுபதிப்பீடு செய்து கொள்ளலாம். மறுபதிப்பீடுகள் மிகவும் சரியானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தவறான முன்னெடுப்புடையதாகவோ, தூற்றுவதாகவோ இருக்கக்கூடாது. இந்த வலைதளத்திலுள்ள எந்த விவரங்களையும் பிறருக்கு தருவதானாலும் அல்லது பதிப்பிடுவதானாலும், ‘மூலம்’ இன்னதென்று தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.
இந்த வலைதளத்தில் இடம்பெற்ற தகவல், விவரங்களில் மூன்றாம் நபர் அல்லது துறையின் காப்புறுதி கொண்டதாக கண்டறியப்பட்ட தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய எங்களால் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விதமான தகவல், விவரங்களை மறுபதிப்பீடு செய்ய சம்மந்தப்பட்ட துறையின் அல்லது மூன்றாம் நபர் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
இரகசியத்தன்மை கொள்கை
பெயர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனி நபரை குறிப்பாக அடையாளப்படுத்தும் தகவல்கள் எதனையும் இந்த வலைதளம் தானாக எடுத்துக்கொள்ளாது. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும்போது, என்ன காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்துவதுடன், அந்த தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தில், தன்னார்வமாக அளிக்கப்பட்ட, தனிநபரை குறிப்பாக அடையாளப்படுத்தக்கூடிய, எந்த தகவல்களையும், எந்தவொரு மூன்றாம் நபருக்கு விற்கப்படுவதோ, பகிர்ந்து கொள்ளப்படுவதோ கிடையாது. இந்த வலைதளத்தில் தங்களால் அளிக்கப்படும் எந்த தகவலும், இழப்பு, தவறான பயன்பாடு, உரிமம் இல்லாதவரால் பயன்படுத்துதல், உரிமம் இல்லாதவருக்கு தெரியப்படுத்துதல், மாற்றுதல் மற்றும் அழிவுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
இந்த வலைதளத்தை பயன்படுத்துபவரின் இணைய முகவரி(IP Address), தளத்தின் பெயர்(Domain Name), உலவியின் வகை (BrowserType), இயங்குதளம் (OS), பயன்பாட்டின் தேதி மற்றும் நேரம், பார்க்கப்பட்ட பக்கங்கள் போன்ற சில விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தை சேதப்படுத்தும் முயற்சிகள் அறியப்பட்டாலன்றி, சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு வலைதளத்தை பார்வையிடும் தனிநபரை அடையாளப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படாது.
வெளி வலைதளங்கள் இணைப்பு கொள்கை
வெளி வலைதளங்கள் இணைப்பு கொள்கை
இந்த வலைதளத்தில் பல இடங்களில் பிற இதர வலைதளங்களுக்கு செல்ல தொடர்பு முகவரிகள் இருப்பதை தாங்கள் அறியலாம். தங்களின் வசதிக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு குறிப்பிடப்பட்ட பிற இதர வலைதளங்கள் எல்லா நேரங்களிலும் இயங்கும் நிலையில் இருக்குமென்பதை எங்களால் உறுதி செய்ய இயலாது. மேலும் அவைகளின் இருப்பை கட்டுப்படுத்துதலும் எங்களிடமில்லை.