மூடு

காணத்தக்க இடங்கள்

கள்ளக்குறிச்சி, இம்மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது நவம்பர் 22 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டில் ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இது இரயில் மற்றும் சாலையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சின்ன சேலம் இரயில் நிலையம் இதன் அறுகாமையில் அமைந்துள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் எந்த இடத்திற்கும் செல்லலாம். இந்த மாவட்டத்தில் பலவிதமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. எங்கள் மாவட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட உங்களை வரவேற்கின்றோம்.

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்

உலகளந்த பெருமாள் திருக்கோயிலூர்

இது கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த விஷ்ணு கோயிலின் முக்கிய தெய்வங்களாக உலகளந்த பெருமாள் (திருவிக்ரம சுவாமி) மற்றும் புஷ்பவல்லிதாயர் காட்சி தருகிறார்கள். கபிலர் குன்று, திருக்கோயிலூரில் மற்றொரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது தென் பெண்ணை நதியின் நடுவில் அமைந்துள்ளது. கபிலர் இங்கே துறவியாகவும், அவரது கடைசி ஓய்வு இடமும் ஆகும். மாநில தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.


திருநரங்கொன்றை

உளுந்தூர்பேட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், திருக்கோயிலூரில் இருந்து 21 கி.மீ தொலைவிலும் இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஒரு ஜைன குகை மேலும் பார்ஸ்வனதா மற்றும் சந்திரபிரபா ஆகிய இரண்டு கோயில்களையும் கொண்டுள்ளது. 8 ஆம் – 9 ஆம் நூற்றாண்டில் இந்த குகைகள் வீரசங்காகளின் மடாலயங்களாக இருந்துள்ளன. கோயில்களில் காணப்படும் வெண்கல சிலைகள் ஒரு சிறப்பு நிறைந்த சேகரிப்பாகும். ஆண்டு விழா (ஜனவரி-பிப்ரவரி) கொண்டாட்டதில் தமிழ்நாட்டிலிருந்து ஜைனர்கள் பெரிய அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றன.


மேல்நாரியப்பனூர் தேவாலயம்

மேல்நாரியப்பனூர் தேவாலயம்

மேல்நாரியப்பனூர் தேவாலயம்

100 வருட பழமை வாய்ந்த தேவாலயம் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாலயத்தில் புனித அந்தோனியர் பக்தரான கஞ்சன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நாரியப்பனூர் தேவாலயம் தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் அற்புதங்கள் மன்னர் புனித ஆன்டனி பாதூவிக்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 அன்று விழா கொண்டாடப்படுகிறது.


கல்வராயன் மலைகள்

இது கிழக்கு காடுகளின் ஒரு பகுதியாகும், கள்ளக்குறிச்சி தாலுக்காவின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. இந்த பகுதி 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்டது. கல்வராயன் மலை மற்றும் அதன் ஜாகிர்தர்கள் களின் வரலாறு விஜய நகர் ராஜ்யத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்தது. கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கினார். ஆனால் பல வரிகளை சுமத்தினார்.

கல்வராயன் மலைகள்

கல்வராயன் மலைகள்

மலையடி பழங்குடியினர்களில் ‘கரளர்’ சமுதாயத்தைச் சார்ந்த வீரர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து கல்வராயன் மலைகளில் குடியேறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் ‘வேடர்’ (வேட்டைக்காரர்) என அழைக்கப்படும் பழங்குடி மக்களை விரட்டி அவர்கள் மனைவிகளை மணந்தார்கள். தற்போது கரளர் மற்றும் வேடர் சமூகங்களை ‘மலையாளி’ என்று அழைக்கப்படுகின்றனர், அவர்கள் தங்களை ‘கவுண்டர்கள்’ என்று கூறுகிறார்கள். கல்வராயன் மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. நீர்வீழ்ச்சிகள், நீரோடை, ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போக இடங்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. தமிழ்நாட்டின் ’ஏழைகளின் மலை பிரதேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கோடைக்கால விழாவை நடத்துகிறது.