மூடு

திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப.,

        திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் 2012 ஆம் ஆண்டு இந்திய குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 2-வது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார். இவர் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றார், பின்னர், திண்டிவனம் சார் ஆட்சியராகப் பணியாற்றினார்.

       திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநராகவும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகவும்; பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையராகவும் பணிபுரிந்தவர். திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் 2021, ஜூன் 16, ஆம் நாளன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.